×

சிவகாசி தாலுகா அலுவலகத்தில் களையிழக்கும் கலை ஓவியங்களை பாதுகாக்க மக்கள் கோரிக்கை

சிவகாசி: சிவகாசி தாலுகா அலுவலகத்தில் அழியும் கலை ஓவியங்களை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.சிவகாசி தாலுகா அலுவலகத்திற்கு தினமும் 500க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். ஒவ்வொறுவரும் ஒருவித பிரச்சனை தீர்வுக்காக வந்து செல்கின்றனர். அதிகாரிகள் இல்லாத நேரத்தில் பல மணி நேரம் காத்திருக்கின்றனர். பல்வேறு பிரச்சனைகளுக்காக தினமும் தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களின் மன உளைச்சலை போக்கும் வகையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தாலுகா அலுவலக நுழைவு வாயில் சுவர் மற்றும் சுற்றுசுவர்களில் ஒட்டபட்டிருந்த விளம்பர போஸ்டர்கள், தேவையற்ற விளம்பரங்களை அப்புறபடுத்தி அழகு ஓவியங்கள் வரையப்பட்டன. வண்ணங்களால் வரையப்பட்ட ஓவியங்கள் கண்டு தாலுகா நிர்வாக அதிகாரிகளை பொதுமக்கள் பலரும் பாராட்டிச் சென்றனர். தாலுகா அலுவலகத்திற்கு வருவோரை நின்று பார்க்க வைப்பதில் ஓவியங்கள் முக்கிய பங்கு வகித்தன.

அடுத்தடுத்து வந்த தாசில்தாரர்கள் தங்களது ரெகுலர் பணிகளை மட்டுமே கவனித்தனர். தாலுகா கட்டிடத்தின் பராமரிப்பில் ஆர்வம் கொள்ளாததால் இந்த ஓவியங்கள் அழிந்து வருகின்றனர். குறிப்பாக கடந்த சில நாட்களாக பெய்த மழையில் தாலுகா அலுவலகத்தில் சகதி ஏற்பட்டது. இந்த சகதிகளை அப்புறப்படுத்திய தாலுகா அலுவலக நிர்வாகம், அழகிய ஓவிய சுவர் பக்கத்தில் கெர்ட்டுவிட்டு சென்றுள்ளனர். இதனைக்கண்டு தாலுகா அலுலவகத்திற்கு வந்த சமூக ஆர்வலர்கள் வேதனையடைந்துள்ளனர்.சமூக ஆர்வலர் ஜெயக்குமார் கூறும்போது, தாலுகா அலுவலக நிர்வாகத்தின் இந்த செயல் வேதனையடைய செய்கின்றது. தாலுகா அலுவலக சுவர்களில் மீண்டும் ஓவியங்கள் வரைய வேண்டும். அழிந்த ஓவியங்களை மீண்டும் வரைய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.



Tags : Sivakasi taluka , People demand protection of weedy art paintings at Sivakasi taluka office
× RELATED சிவகாசி தாலுகா அலுவலகத்தில்...