டெல்லி கலவரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!: தற்போதைய நீதிபதி தலைமையில் விசாரணைக்கு வலியுறுத்தல்..!!

டெல்லி: டெல்லி கலவரம் குறித்து பாரபட்சமின்றி தற்போதையை நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஜஹாங்கிர் பூரி பகுதியில் நேற்று முன்தினம் அனுமன் யாத்திரையின் போது பயங்கர கலவரம் வெடித்தது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கலவரம் தொடர்பாக தற்போதைய நீதிபதி தலைமையில் பாரபட்சமின்றி விசாரணை நடத்த வலியுறுத்தி வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில் டெல்லி காவல்துறையின் நடவடிக்கை ஒருதரப்பாகவும், குற்றவாளிகளை பாதுகாக்கும் விதமாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீது இன்றே விசாரணை நடைபெறலாம் என தெரிகிறது. இதனிடையே டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிசூட்டில் காயமடைந்த உதவி ஆய்வாளர் மேதாலால் வீட்டிற்கு நேரில் சென்று டெல்லி காவல்துறை ஆணையர் ராகேஷ் அஸ்தானா நலம் விசாரித்தார். அப்போது அவரது தைரியத்தை பாராட்டிய அஸ்தானா, தங்களுக்கு தேவையான உதவி, ஆதரவை காவல்துறை அளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Related Stories: