×

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மீண்டும் வடகலை - தென்கலை பிரச்சனை.: பொதுமக்கள் நிரந்தர தீர்வு வேண்டும் என கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மீண்டும் வடகலை - தென்கலை பிரச்சனை தொடங்கியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த பாலாற்றில் வரதராஜப் பெருமாள் இறங்கும் வைபவம் தற்போது சித்ராபௌர்ணமியையொட்டி  நடைபெற்றது.

அப்போது பாலாற்றங்கரையில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாடுவதில் முன்னோற்றுதலின் பொழுது இரு பிரிவினருக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதம் பெரிதாகி கைகலப்பாக மாறி ஒருவருக்கொருவர் தள்ளி தாக்கிக்கொண்டனர். இதனால் இந்த நிகழ்வை காண வந்த 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் முகச்சுழிப்பை ஏற்படுத்தியது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை, தென்கலை இடையே இதுபோல மோதல் நடைபெறுவது இது முதல் முறை கிடையாது. இந்த மோதல் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் அளவிற்கு சென்றுள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பை மதிக்காமல் அடிக்கடி வடகலை- தென்கலை இடையே ஏற்படும் மோதலை தடுக்க பொதுமக்கள் நிரந்தர தீர்வு வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : Kanjhipuram Varadaraja ,Peramal Temple ,South , Kanchipuram Varadaraja Perumal temple again North-South issue: Public demand for permanent solution
× RELATED தென் கொரிய எல்லைப்பகுதியில் ராட்சத...