×

சீனாவில் விஸ்வரூபம் எடுத்து வரும் கொரோனா தொற்று: புதிய ஊரடங்கிற்கு பிறகு ஷாங்காயில் முதல் உயிரிழப்பு

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் சீனாவின் ஷாங்காய் நகரத்தில் சமீபத்திய ஊரடங்கிற்கு பிறகு முதல் கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. சீனாவில் பல்வேறு மாகாணங்களில் ஒமிக்ரான் வகை கொரோனா பரவல் உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக சீன பொருளாதாரத்திற்கு பெரும் பங்கு வகிக்கும் ஷாங்காய் நகரில் இதுவரை கண்டிராத பரவல் ஏற்பட்டுள்ளது. இங்கு தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்க்கு தொற்று பரவி வருகிறது. எனவே கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சீன அரசு முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டைவிட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டிருப்பதால் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்காக தொகுப்பு வீடுகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்படுவதால் அவர்கள் சுகாதார பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஷாங்காய் நகரில் தொற்றை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வரும் நடவடிக்கையாக கட்டுப்பாடுகளை மேலும் கடுமையான மாகாண அரசு திட்டமிட்டு வரும் நிலையில் அங்கு முதல் கொரோனா மரணம் ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருந்த 89 முதல் 90 வயதிற்கு இடைப்பட்ட 3 பேர் உயிரிழந்திருப்பதாக ஷாங்காய் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இதையடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கை முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.         


Tags : China ,Shanghai , China, Corona, New Curfew, Shanghai, casualties
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்