×

நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவெடுத்திருப்பதாக தகவல்

சென்னை : நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவது பற்றி ஆராய நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவை நியமித்து அக்குழுவின் அறிக்கை அடிப்படையில் சட்டப்பேரவையில் சட்டம் இயற்றி அதனை ஆளுநரின் ஒப்புதலுக்கு 2021ம் ஆண்டு செப்டம்பரில் அனுப்பி வைத்தது. 142 நாட்களுக்கு பிறகு மசோதாவில் சில ஆட்சியபங்களை குறிப்பிட்ட சபாநாயகருகே ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாவை திருப்பி அனுப்பினார்.

அந்த திருப்பமும் இன்றி மார்ச் 13ம் தேதி மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி திமுக அரசு திரும்பவும் ஆளுநருக்கு அனுப்பியது. மசோதாவை உடனடியாக குடியரசு தலைவருக்கு அனுப்ப ஆளுநரிடம் முதல்வர் ஸ்டாலின் நேரில் வலியுறுத்தினார். டெல்லியில் பிரதமரை சந்தித்த போதும், அவர் கேட்டுக் கொண்டார். இருப்பினும் காலம் தாழ்த்தி வரும் ஆளுநரின் செயலை கண்டித்து சித்திரை திருநாள் அன்று அவர் அளித்த தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணித்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும் புறக்கணித்தன. ஆளுநர் ஆர்.என்,ரவிக்கு கடும் எதிர்ப்புக்கள் கிளம்பி வந்த  நிலையில், மசோதா தொடர்பான பரிசீலனை மற்றும் குறிப்பெழுதும் பணிகள் முடிந்து விட்டதால் அதனை குடியரசு தலைவருக்கு ஆர்.என்,ரவி அனுப்ப முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ஓரிரு நாட்களில் முதல்வர் ஸ்டாலினுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Governor ,R.R. ,N. Ravi , Need, Exemption, Bill, Republican, Governor RN Ravi
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் எதிரொலி;...