×

உலக பாரம்பரிய தினம் : மாமல்லபுரத்தில் இன்று பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்!!

சென்னை : உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களை இன்று மாலை 6 மணி வரை இலவசமாக கண்டு களிக்கலாம் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. மாமல்லபுரம் கடற்கரை கோவில் பகுதியில், காலை 9:30 மணிக்கு, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், புகைப்பட கண்காட்சியை துவக்கி, மாமல்லபுரம் சிற்பங்கள் குறித்து நுாலை வெளியிடுகிறார்.


Tags : World Heritage Day ,Mamallapuram , World Heritage Day, Mamallapuram, Public, Permission
× RELATED மாமல்லபுரத்தில் பரபரப்பு சிற்ப கல்லூரி வளாகத்தில் தீ