அரக்கோணம் பயிற்சி மையத்தில் சிஆர்பிஎப் வீரர் தூக்கிட்டு தற்கொலை

அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் பயிற்சி பெற்று வந்த வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையம் உள்ளது. இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த ஜெய்பிரகாஷ்குமார்(23) என்பவர் 10 மாத அடிப்படை பயிற்சி மேற்கொள்ள கடந்த மாதம் வந்தார். இந்நிலையில் அங்குள்ள கேண்டீன் அருகே ஒரு அறையில் நேற்று காலை மின்விசிறியில் தூக்குப்போட்டு ஜெய்பிரகாஷ்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தக்கோலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து ஜெய்பிரகாஷ்குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பயிற்சி மையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: