×

விவசாயிகள் படுகொலை ஆசிஷ் ஜாமீன் ரத்தாகுமா? இன்று தீர்ப்பு

புதுடெல்லி: கடந்தாண்டு அக்டோபர் மாதம் உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூர்கேரியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் மீது ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் மோதி, 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் ஆசிஷ் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். ஆசிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 10ம் தேதி ஜாமீன் வழங்கியது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினரும், உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 2 வழக்கறிஞர்களும் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். ஆசிஷுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யும்படி இவர்கள் கோரினர். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 4ம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்த வழக்கில் இன்று காலை தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது.

Tags : Ashish , Will Ashish's bail be canceled? Judgment today
× RELATED லக்கிம்பூரில் விவசாயிகள் கொலை செய்த...