×

73 ரன் விளாசினார் ருதுராஜ்

புனே: குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்க வீரர் ருதுராஜ் கெயிக்வாட் 73 ரன் விளாசினார். எம்சிஏ ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசியது. சிஎஸ்கே தொடக்க வீரர்களாக ருதுராஜ், உத்தப்பா களமிறங்கினர். உத்தப்பா 3 ரன் எடுத்து ஷமி வேகத்தில் வெளியேற, அடுத்து வந்த மொயீன் அலி 1 ரன் மட்டுமே எடுத்து அல்ஜாரி ஜோசப் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார்.

சென்னை அணி 32 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறிய நிலையில், ருதுராஜ் - ராயுடு ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் 3வது விக்கெட்டுக்கு 92 ரன் சேர்த்தனர். ருதுராஜ் 37 பந்தில் அரை சதம் அடித்தார். ராயுடு 46 ரன் (31 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), ருதுராஜ் 73 ரன் (48 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி விக்கெட்டை பறிகொடுத்தனர். ஷிவம் துபே 19 ரன் எடுத்து கடைசி பந்தில் ரன் அவுட்டாக, சிஎஸ்கே 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன் குவித்தது. கேப்டன் ஜடேஜா 22 ரன்னுடன் (12 பந்து, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். குஜராத் பந்துவீச்சில் ஜோசப் 2, தயாள், ஷமி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.


Tags : Rudraj , Rudraj scored 73 runs
× RELATED ரச்சின் 46, ருதுராஜ் 46, துபே 51 சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி