எஸ்டிபிஐ, ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் கொலை கொலையாளிகள் யார்? அடையாளம் தெரிந்தது: கேரள ஏடிஜிபி தகவல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், எலப்புள்ளி அருகே உள்ள குப்பியோடு பகுதியை சேர்ந்த எஸ்டிபிஐ பிரமுகரான சுபைர் (43) என்பவர் 3 தினங்களுக்கு முன் ஒரு கும்பலால் சரமாரி வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு ஆர்எஸ்எஸ் தான் காரணம் என்று எஸ்டிபிஐ குற்றம்சாட்டியது.  இந்த சம்பவம் நடந்து 24 மணி நேரத்திற்குள் பழிக்குப் பழியாக  ஆர்எஸ்எஸ் பிரமுகரான னிவாசன் (44) என்பவர் அவரது ஒர்க் ஷாப்புக்குள் புகுந்து சராமரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். இது, பாலக்காட்டில் மேலும் பதற்றத்தை  ஏற்படுத்தியது. மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், 20ம் தேதி வரை பாலக்காட்டில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரள சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி விஜய் சாக்கரே நேற்று அளித்த பேட்டியில், ‘2 கொலைகளும் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளன. கொலையாளிகளை பிடிப்பதற்கு 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொலையில் ஈடுபட்டவர்கள் குறித்து முக்கிய துப்பு கிடைத்துள்ளது. விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்,’ என தெரிவித்தார்.

Related Stories: