திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்: அமைச்சர் ஆவடி நாசர் பங்கேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக மாநகர, ஒன்றிய, நகர பேரூர் செயலாளர்கள் மற்றும் அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் காக்களூர் ஆர்.எம்.கெஸ்ட் ஹவுஸில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளரும், பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் தலைமை வகித்து நடைபெற உள்ள 15வது திமுக உட்கட்சி தேர்தலுக்கான விண்ணப்ப படிவங்களை வழங்கினார். அப்போது அவர், தலைமை கழகம் அறிவித்துள்ள உத்தரவினை ஏற்று நடைபெற உள்ள 15வது திமுக உட்கட்சி தேர்தல் பணிகள் குறித்தும், உட்கட்சி தேர்தலை சுமூகமான முறையில் நடத்துவது குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்திற்கு பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, மாநில, மாவட்ட நிர்வாகிகள் சி.ஜெரால்டு, கே.ஜெ.ரமேஷ், மா.ராஜி, எஸ்.ஜெயபாலன், த.எத்திராஜ், ஆர்.எஸ்.ராஜராஜன், கு.சேகர், எம்.குமார், ஜெ.மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன் வரவேற்றார். இந்த கூட்டத்தில் திமுக மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் டி.தேசிங்கு, என்.இ.கே.மூர்த்தி, புஜ்ஜி டி.ராமகிருஷ்ணன், ஜி.ராஜேந்திரன், பேபி சேகர், பொன்.விஜயன், ஜி.நாராயண பிரசாத், தி.வை.ரவி, ஜி.ஆர்.திருமலை, தங்கம் முரளி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் க.பிரபு கஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: