கும்மிடிப்பூண்டி, ஆரணியில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ திறந்து வைத்தார்

ஊத்துக்கோட்டை: ஆரணி பேரூராட்சியில் தண்ணீர் பந்தலை டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ  திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார். சோழவரம் ஒன்றியம் ஆரணி பேரூர் திமுக சார்பில் ஆரணி காவல் நிலையம் அருகே தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆரணி நகர செயலாளர் வெங்கடேசன் தலைமை வகித்தார். ஆரணி பேரூராட்சி கவுன்சிலர் கண்ணதாசன், முன்னாள் நகர செயலாளர் முத்து, அவைத்தலைவர் ரமேஷ், மாவட்ட பிரதிநிதி கரிகாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சோழவரம் திமுக ஒன்றிய செயலாளர் செல்வசேகரன் வரவேற்றார்.

இதில், சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர், இளநீர், தர்பூசணி, குளிர்பானங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில், நிர்வாகிகள் மங்களம் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், பேரூராட்சி கவுன்சிலர் ரஹ்மான்கான், வழக்கறிஞர்கள் சுரேந்தர், ஜெகன், பாலாஜி, நிலவழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை பகுதியில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் கி.வே.ஆனந்தகுமார் தலைமை வகித்தார். ஒன்றிய அவைத்தலைவர் வேதாசலம், துணை செயலாளர்கள் பாஸ்கரன், சுகு.கணேசன், மாவட்ட பிரதிநிதிகள் காளத்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் ஜோதி, அமலா சரவணன், அரிபாபு, தொண்டரணி அமைப்பாளர் முத்துக்குமார், பேரூராட்சி கவுன்சிலர் சி.கருணாகரன், பொறியாளர் அணி அமைப்பாளர் பிரசாத், இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், கவரப்பேட்டை பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கீழ்முதலம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் நமச்சிவாயம், ஒன்றிய கவுன்சிலர் இந்திரா திருமலை ஆகியோர் வரவேற்றனர்.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று தண்ணீர் பந்தலை திறந்துவைத்தார். பின்னர் ஏழை, எளிய மக்களுக்கு தர்ப்பூசணி, மோர், இளநீர் கூல்ட்ரிங்ஸ் உள்ளிட்டவற்றை வழங்கினார். இதேபோல் சத்தியவேடு திருப்புமுனை பகுதியில் கீழ்முதலம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் நமச்சிவாயம் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் திறந்துவைத்தார்.

Related Stories: