ரயில்வே திட்டங்களை செயல்படுத்தக்கோரி திருவள்ளூரில் பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட பாமக சார்பில் ஒன்றிய அரசு தமிழகத்தில் கிடப்பில் போட்டுள்ள ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்தக்கோரி திருவள்ளூர் ரயில் நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் ஆலப்பாக்கம் சேகர், கும்மிடிப்பூண்டி ரமேஷ், சிவப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில அமைப்பு துணைச் செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை மாநில மாநில துணைப் பொதுச் செயலாளர் லயன் பாலா (எ) பாலயோகி, மாவட்ட செயலாளர் அம்பத்தூர் சேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆலப்பாக்கம் டில்லிபாபு ஆகியோர் தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசு தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்துதல், தென்னக ரயில்வேவுக்கு நிதி ஒதுக்காமல் புறக்கணிக்கப்படுவதை கண்டித்தல், உரிய நிதி ஒதுக்கீடு செய்யக்கோருதல், தென்னக ரயில்வேயில் அதிக காலிப்பணியிடங்கள் உள்ளதால் இதில் தென்னிந்தியாவை சேர்ந்தவர்களை மட்டுமே நிரப்பக்கோருதல், கோவை எக்ஸ்பிரஸ் மற்றும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களை திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நிறுத்தக்கோருதல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் பாமக நிர்வாகிகள் குமார், விஜயன், ரமேஷ் அனந்தகிருஷ்ணன், விடையூர் கேசவன், கணேஷ், சரவணன், பாலசர்வேஷ், ஒன்றிய செயலாளர்கள் விஜயராகவன், திருப்பாச்சூர் பிரபா கேசவன், வினோத், சண்முகம், சங்கர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். முடிவில் நகர செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

Related Stories: