×

நடிகை சாவி மித்தலுக்கு மார்பக புற்றுநோய்

மும்பை: பாலிவுட் நடிகை சாவி மித்தல், தனக்கு ஏற்பட்டுள்ள மார்பக புற்றுநோய் குறித்தும், அந்த நோயை சமாளிப்பதற்கான வழிகள் குறித்தும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ‘அன்புள்ள மார்பகமே, இது உனக்கான பாராட்டு பதிவு. முதல்முறை உன்னை பார்த்தபோது அதிக மகிழ்ச்சி ஏற்பட்டது. என் குழந்தைகளுக்கு நீ பால் கொடுக்கும்போது உனது முக்கியத்துவத்தை உணர்ந்தேன். ஆனால், இன்று நான் மார்பக புற்றுநோயுடன் போராடுகிறேன். புற்றுநோயுடன் போராடுவது சாதாரண விஷயம் அல்ல. அதற்காக என் மனதை சோர்வடைய செய்ய மாட்டேன். எளிதாகவும் இருக்கக்கூடாது, கடினமாகவும் இருக்கக்கூடாது. மார்பக புற்றுநோயில் இருந்து மீண்டு வருபவர்களுக்கு என் வாழ்த்துகள்.
உங்களிடம் இருந்து நான் உத்வேகம் பெறுகிறேன். ஆனால், அது உங்களுக்கு தெரியாது. இக்கட்டான இந்த நேரத்தில் எனக்கு போன் செய்து நலம் விசாரித்தவர்களுக்கு நன்றி’ என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

Tags : Chavi Mittal , Actress Chavi Mittal has been diagnosed with breast cancer
× RELATED போராட்டங்கள் நடத்தியபோதும் தடையை...