நடிகர் வருண் தவானுக்கு போலீஸ் அபராதம்

கான்பூர்: உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ‘பவால்’ என்ற இந்திப் படத்தின் ஷூட்டிங்கில் பாலிவுட் நடிகர் வருண் தவான் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது. கான்பூர் ஆனந்த்பாக் பகுதியில் மக்கள் நெருக்கமான இடத்தில் படப்பிடிப்பு நடந்தபோது செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானது. அதில் வருண் தவான் பைக்கில் செல்கிறார். கருப்பு நிற பேண்ட், ஷூ மற்றும் கூலிங்கிளாசுடன் நீல நிற சட்டை அணிந்து செல்வதை காண முடிகிறது. இந்நிலையில் அவர் ஹெல்மெட் அணியாமல் பைக்கை ஓட்டிச் சென்றதால், அவர் மீது நடவடிக்கை மேற்கொண்ட உத்தரபிரதேச போலீசார், அபராத சலான் அனுப்பியுள்ளனர். அதில், பைக்கின் நம்பர் பிளேட்டில் விதிகளை மீறி எண்கள் எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் வருண் தவானுக்கு இன்னும் ஒரு அபராத சலான் வழங்கப்படும் என்று, போலீஸ் அனுப்பியுள்ள சலானில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: