×

மும்பை தொடர் தோல்விக்கு கேப்டனாக பொறுப்பேற்கிறேன்: ரோகித்சர்மா பேட்டி

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடந்த 26வது லீக் போட்டியில் மும்பை அணி, லக்னோவிடம் 18 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது. தொடர்ச்சியாக 6 தோல்விகளை சந்தித்துள்ள மும்பையின் பிளே ஆப் சுற்றுவாய்ப்பு சிக்கலாகி உள்ளது. மீதமுள்ள 8 போட்டிகளில் வென்றால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். தொடர்ந்து தோல்வி குறித்து கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது: நாங்கள் தொடர்ச்சியாக 6 தோல்விகளை சந்தித்து விட்டோம். ஆனால் எங்களுக்கு தேவையான ஆடும் லெவனை எங்களால் சரியாக கண்டறிய முடியவில்லை.

எங்களின் தொடர் தோல்விகளுக்கு எந்த ஒரு விஷயத்தையும் தனியாக குறிப்பிட்டு காரணமாக சொல்ல முடியாது. பந்துவீச்சாளர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும், பும்ரா மிக சிறப்பாக பந்துவீசுகிறார், அதேபோல் மற்றவர்களும் தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுப்பது முக்கியம். ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை, இருந்தாலும் அதற்காக சோர்ந்து போய்விடவில்லை. நிச்சயமாக தோல்வியில் இருந்து மீண்டு வருவோம். ஒரு கேப்டனாக மும்பை அணியின் தொடர் தோல்விகளுக்கு நானே பொறுப்பேற்று கொள்கிறேன். நிச்சயமாக அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிக்காக கடுமையாக முயற்சிப்போம், என்றார்.

Tags : Mumbai ,Rokitsarma , I take responsibility as captain for Mumbai series defeat: Rohit Sharma interview
× RELATED மும்பை – சூரத் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு