×

ஐபிஎல்லில் இன்று சரவெடி சன்டே: ஐதராபாத்-பஞ்சாப், சென்னை-குஜராத் மோதல்

மும்பை:ஐபிஎல் தொடரில் இன்று 2 போட்டி நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு டி.ஒய். பாட்டில் மைதானத்தில் சன்ரைசர்ஸ்- பஞ்சாப்கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத் முதல் 2 போட்டியில் (ராஜஸ்தான், லக்னோ) தோல்வி கண்ட நிலையில் அடுத்த 3 போட்டிகளில் (சென்னை, குஜராத், கேகேஆர்) ஹாட்ரிக் வெற்றியை ருசித்தது. இன்று வெற்றியை தொடரும் முனைப்பில் உள்ளது. மறுபுறம் பஞ்சாப் 5 போட்டியில் 3 வெற்றி (பெங்களுரு, சென்னை, மும்பை) 2 தோல்வி (கேகேஆர், குஜராத்) அடைந்துள்ளது. கேப்டன் மயங்க் அகர்வால், தவான், லிவிங்ஸ்டன் என அதிரடியில் மிரட்டுகின்றனர். இரு அணிகளும் வெற்றியை தொடரும் முனைப்பில் களம் இறங்குகின்றன. இதற்கு முன் நேருக்கு நேர் சந்தித்த 18 போட்டியில் ஐதராபாத் 12, பஞ்சாப் 6 வெற்றி பெற்றுள்ளது.

தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு புனவேில் குஜராத் டைட்டன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகின்றன. புது அணியான குஜராத், லக்னோ, டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தானை வீழ்த்தி 4 வெற்றியுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ஐதராபாத் அணியிடம் மட்டும் தோல்வி கண்டுள்ளது. கேப்டன் ஹர்த்திக் பாண்டியா 228 ரன் எடுத்துள்ளார். சுப்மான்கில் பேட்டிங்கில் வலு சேர்க்கிறார். பந்துவீச்சில் ஷமி, பெர்குசன், ரஷித்கான் பார்மில் உள்ளனர். மறுபுறம் முதல் 4 போட்டிகளிலும் (கேகேஆர், லக்னோ, பஞ்சாப், ஐதராபாத்) தோல்வி அடைந்த நடப்பு சாம்பியன் சென்னை, 5வது போட்டியில் பெங்களூருரை வீழ்த்தி வெற்றி பாதைக்கு திரும்பியது. இன்று அதனை தொடர வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

Tags : Saravedi ,IPL ,Hyderabad ,Punjab ,Chennai ,Gujarat , Saravedi Sunday in IPL today: Hyderabad-Punjab, Chennai-Gujarat clash
× RELATED மும்பை சவாலுக்கு சன்ரைசர்ஸ் தயார்