×

வேதாரண்யத்தில் திடீரென உள்வாங்கிய கிணறு: நில நடுக்கமா? விவசாயிகள் அச்சம்

வேதாரண்யம்: நாகை அருகே வேதாரண்யத்தில் 20 அடி அழத்தில் இருந்த கிணறு திடீரென உள்வாங்கியதால் நில நடுக்கமா என விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா செம்போடை வடகாடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. விவசாயியான இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது தோட்டத்தில் உள்ள மா மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச கிணறு ஒன்றை வெட்டி அதை பயன்படுத்தி வந்தார்.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல் கந்தசாமி தண்ணீர் பாய்ச்ச தோட்டத்துக்கு சென்ற போது கிணற்றை திடீரென காணவில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து கந்தசாமி கூறுகையில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சிலரை அழைத்து வந்து கிணறு அமைத்தேன். 50ஆயிரம் செங்கற்கள் தேவைப்பட்டது. 20 அடி அகலம், 20 அடி ஆழமும் கொண்ட இந்த கிணற்றை அமைக்க இரண்டரை லட்சம் ரூபாய் செலவு செய்தேன்.

தண்ணீரும் நன்றாக ஊறியது. அதனை வைத்து விவசாயம் செய்து வந்தேன். வழக்கம் போல் தோட்டத்துக்கு வந்த போது பூமிக்குள் கிணறு முழுவதும் உள்வாங்கியதும், மணலும் முழுவதும் சரிந்து இருந்ததும் தெரிய வந்தது. இடியோடு மழை பெய்ததால் இடி விழுந்த அதிர்வால் பூமிக்குள் கிணறு உள் வாங்கியதா அல்லது நில நடுக்கமா என தெரியவில்லை. இதுகுறித்து வருவாய் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags : Vedaranyam , vetharanyam, earth quack, Farmers fear
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்