இன்று நடைபெறுகிறது திமுக ஆலோசனை கூட்டம்: அமைச்சர் ஆவடி நாசர் அறிவிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் வௌியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (17ம்தேதி) மாலை 3 மணியளவில் காக்களூர் பைபாஸ் சாலையில் உள்ள ஆர்.எம்.கெஸ்ட் ஹவுஸில் எனது தலைமையில் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, மாநில மாவட்ட நிர்வாகிகள் சி.ஜெரால்டு, கே.ஜெ.ரமேஷ், காயத்ரி தரன், மா.ராஜி, எஸ்.ஜெயபாலன், தொழுவூர் பா.நரேஷ்குமார், த.எத்திராஜ், வி.ஜெ.சீனிவாசன், வி.சிங்காரம், ஆர்.எஸ்.ராஜராஜன், கு.சேகர், எல்லாபுரம் எம்.குமார், பொன் ஜி.விமல்வர்ஷன், ஜெ.மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இதில் ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன் வரவேற்று பேசுகிறார். இந்த கூட்டத்தில், நடைபெற உள்ள திமுக 15வது உட்கட்சி பொதுத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. எனவே, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: