உத்திரமேரூரில் சுந்தர வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்

உத்திரமேரூர்: உத்திரமேரூரில் பிரசித்தி பெற்ற ஆனந்தவள்ளி சமேத சுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் பிரமோற்சவ விழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுந்தரவரதராஜ பெருமாள் தேவி பூதேவியுடன் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 3ம் நாளானன்று சுந்தரவரதராஜ பெருமாள் கருட சேவை உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து 7ம் நாளான நேற்று தேவி பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட சுந்தர வரதராஜர், தேரில் எழுந்தருளினார். கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். தேரடி வீதியில் துவங்கிய தேரோட்டம் சின்ன நாராசம்பேட்டை தெரு, திருமலையா பிள்ளை தெரு, பஜார் வீதி, ராயர் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனர்.

நிகழ்ச்சியை ஒட்டி பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் உத்திரமேரூர் போலீசார் ஈடுபட்டனர்.உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், ேதரோட்டத்தை கண்டுகளித்தனர்.

Related Stories: