×

அயோத்யா மண்டப முறைகேடு குறித்து போலீசில் புகார் கொடுத்தவரை மிரட்டிய ஆசாமி கைது

சென்னை: அயோத்யா மண்டப முறைகேடு தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தவரை மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை, மேற்கு மாம்பலத்திலுள்ள அயோத்யா மண்டபம் ராம் சமாஜ் அமைப்பின் கீழ் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த 2013ம் ஆண்டு அயோத்யா மண்டபத்தை இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவந்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ராம் சமாஜ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.அதனைத் தொடர்ந்து ராம் சமாஜ் அமைப்பு பல 100 கோடி ரூபாய் முறைகேடு செய்த திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், ராம் சமாஜ் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அயோத்யா மண்டபத்தை அறநிலையத்துறை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இந்நிலையில், ராம் சமாஜ் அமைப்பின் 100 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பான தகவல்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த சமூக ஆர்வலர் எம்.வி.ரமணி தனக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குறுஞ்செய்தி வாயிலாக கொலை மிரட்டல் விடுப்பதாக அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66(a), 67 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் எஸ்எம்எஸ் அனுப்பியது மகேஷ் என்பதும், அவர் நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

அதனடிப்படையில் அசோக் நகர் போலீசார் மகேஷை கைது செய்தனர். அயோத்யா மண்டபம் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்கு கீழ் சென்றுவிட்டதால் இனி தனக்கு உணவு ஆர்டர் கிடைக்காது என்ற ஆத்திரத்தில் சமூக ஆர்வலர் ரமணிக்கு குறுஞ்செய்தி வாயிலாக மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Tags : Asami ,Ayodhya , On the Ayodhya Hall abuse Asami was arrested for intimidation until he lodged a complaint with the police
× RELATED சென்னையில் இருந்து புறப்பாடு, வருகை என 8 விமான சேவைகள் ரத்து