×

மான்டி கார்லோ அரையிறுதியில் சிட்சிபாஸ் - ஸ்வெரவ் மோதல்

மான்டி கார்லோ: ரோலக்ஸ் மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் அலெக்சாண்டர் ஸ்வெரவ் -  ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் மோதுகின்றனர். மொனாகோவில் நடைபெறும் இத்தொடரில்  நேற்று காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. ஜெர்மனியின் ஸ்வெரவ் (3வது ரேங்க்) 5-7, 6-3, 7-6 (7-5) என்ற செட்களில் இத்தாலியின் யானிக் சின்னரை (12வது ரேங்க்) வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 3 மணி, 7 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு காலிறுதியில் சிட்சிபாஸ் (கிரீஸ்,  5வது ரேங்க்) 6-2, 6-7 (3-7), 6-4 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் டீகோ ஸ்வார்ட்ஸ்மனை (16வது ரேங்க்) வென்றார். இப்போட்டி 2மணி, 43 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

நம்பர் 1 வீரர் ஜோகோவிச்சை 2வது சுற்றில் வீழ்த்தியதால் கவனம் பெற்ற   ஸ்பெயின் வீரர் டேவிடோவிச் (46வது ரேங்க்)  காலிறுதியிலும் ஒரு அதிசயத்தை நிகழ்த்தினார். அவர்  அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்சை (13வது ரேங்க்) 2-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில்   2 மணி, 25 நிமிடங்களில் போராடி வென்று முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார்.கடைசி காலிறுதியில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ்(29வது ரேங்க்) 6-4, 3-6, 7-6 (6-2) என்ற செட்களில்  போலந்தின் ஹர்காக்ஸை (14வது ரேங்க்) வீழ்த்தினார். அரையிறுதி ஆட்டங்களில்  ஸ்வெரவ் - சிட்சிபாஸ்,   டேவிடோவிச் - கிரிகோர் மோத உள்ளனர்.இரட்டையர் பிரிவு அரையிறுதியில் களமிறங்கிய இந்தியாவின் போபண்ணா - ஜேமி மர்ரே (இங்கி.) இணை 6-3, 6-7 (4-7), 9-11 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ராஜீவ் ராம் - ஜோ சாலிஸ்பரி (இங்கி.) ஜோடியிடம் போராடி தோற்றது.



Tags : Monte ,Carlo ,Sverre , Monte Carlo Sitsipass in the semifinals - Sverre clash
× RELATED சில்லி பாயின்ட்…