மே 8ல் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் சமீபத்தில் பதவி ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து நடிகர் சங்கத்தின் 66வது பொதுக்குழு கூட்டம், வரும் மே 8ம் தேதி பிற்பகல் 2 மணியளவில் சென்னை சாந்தோம் பள்ளியில் நடைபெறுகிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பதவிக்கு வந்துள்ள நாசர் தலைமையில் கூட்டம் நடக்கிறது.

அப்போது நடிகர் சங்க புதிய கட்டிடம் கட்டி முடிப்பதற்கான மீதமுள்ள நிதியை திரட்ட ஒப்புதல் பெற தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மேலும் பல முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் 2,500க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்கின்றனர்.

Related Stories: