சென்னை மாநகராட்சி 4, 5வது மண்டல குழு தலைவர் அலுவலகம்; உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ திறந்தார்

சென்னை: சென்னை மாநகராட்சி 4வது மண்டலத்துக்குட்பட்ட பெரம்பூர், ஆர்.கே.நகர் ஆகிய பகுதிகளில்  திமுக சார்பில், 10 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தலா ஒரு கவுன்சிலர் வெற்றி பெற்றனர். 15 கவுன்சிலர்களை கொண்ட 4வது மண்டலத்தில் மண்டல குழு தலைவராக 38வது வார்டில் திமுக சார்பில் வெற்றி பெற்ற நேதாஜி யு.கணேசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. தண்டையார்பேட்டை-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், இந்த அலுவலகத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

இதில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா, கலாநிதி வீராசாமி எம்பி, எம்எல்ஏக்கள் ஆர்.டி.சேகர், ஜே.ஜே.எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி, பகுதி செயலாளர்கள் லட்சுமணன், ஜெபதாஸ் பாண்டியன், பொறியாளர் அணி மாநில துணை செயலாளர் நரேந்திரன், காங்கிரஸ் கவுன்சிலர்கள் திரவியம், டில்லிபாபு, சிவராஜசேகர், மதிமுக கவுன்சிலர் ஜீவன் மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள், அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக, துறைமுகம் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி 4வது மண்டலம் 54வது வார்டு கவுன்சிலர் ஸ்ரீராமுலு, 5வது மண்டல குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது மண்டல அலுவலகத்தை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ திறந்து வைத்தார். கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். உதயநிதி ஸ்டாலினுக்கு செண்டை மேளம் கொட்டி சிறப்பாக வரவேற்றனர்.

Related Stories: