×

விதிகளை மீறும் ஸ்விக்கி, சுமோட்டா, டன்சோ ஊழியர்கள்; 365 வழக்குகள் பதிவு, ரூ.48,300 அபராதம்.! சென்னை காவல்துறை அதிரடி

சென்னை: சென்னை பெருநகரில் ஏராளமான மொபைல் ஆப் அடிப்படையிலான உணவு விநியோக சேவைகள் (ஸ்விக்கி, சுமோட்டா, டன்சோ போன்றவை) செயல்பட்டு வருகின்றன. இந்த சேவை பிரபலமாக அதிகரித்து வருவதுடன்,  உணவு விநியோக பணியாளர்களின் எண்ணிக்கை  ஒருங்கிணைப்பாளர்களால் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

அவர்களுக்கு வழங்கப்படும் பணப்பயன் விதிமுறைகளின் காரணமாக, பெரும்பாலான உணவு விநியோக வாகன ஓட்டிகள் சிக்னல் மீறல், எதிர் திசையில் வாகனம் ஓட்டுதல், தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், வாகனம் ஓட்டும் போது கைபேசிகளைப் பயன்படுத்துதல் மற்றும் அதிக வேகத்தில் சென்று பணம் சம்பாதிக்கும் நோக்கத்தினால் போக்குவரத்து விதிகளை மீறுகின்றனர் என்பதும் கண்காணிக்கப்படுகிறது. விரைவாக விநியோகம் செய்வதின் மூலம், அவர்களின் உயிரையும் மற்ற வாகன ஓட்டிகளின் உயிரையும் ஆபத்துக்கு உள்ளாக்குகிறார்கள்.

இந்த விதிமீறல்களை குறைக்கும் வகையில், கடந்த 30.03.2022 அன்று சிறப்பு வாகன தணிக்கை சென்னை பெருநகரம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டது. இந்த சிறப்பு தணிக்கையின் போது 978 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1,35,400 அபராதம் விதிக்கப்பட்டது. 07.04.2022 அன்று நடத்தப்பட்ட கூட்டத்தின் போது நிறுவனம் வாரியாக விவரங்கள் எடுக்கப்பட்டு, மீறுபவர்களின் விவரங்களுடன் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்கள் நிறுவனங்களின் பொறுப்பாளருக்கு மின்னஞ்சல் மூலமாகவும், நேரிலும் தரப்பட்டது. இது சம்பந்தமாக அடுத்த கூட்டத்தில் மதிப்பாய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

நேற்று உணவு விநியோக வாகன ஓட்டிகள் மீது இதே போன்ற சிறப்பு வாகன தணிக்கை நடத்தப்பட்டது. மொத்தம் 365 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.48,300 அபராதம் விதிக்கப்பட்டது. பகுப்பாய்வில், உணவு விநியோக வாகன ஓட்டிகளால் ஏற்படும் விதி மீறல்களைக் குறைக்க GCTP எடுத்த முயற்சிகள் முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. எனினும் போக்குவரத்து விதிகளை மீறும் உணவுப் பொருட்களை விநியோகிக்கும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு, மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த தணிக்கை மேலும் தொடரும்.

Tags : Swikie ,Sumota ,Dunzo , Zwicky, Sumota, Danzo employees violating the rules; 365 cases registered, fines of Rs. 48,300! Chennai Police Action
× RELATED விதிகளை மீறும் ஸ்விக்கி, சுமோட்டா,...