×

தனியார் மருத்துவமனைக்கு 15 ஆயிரம் டோஸ் கோவாக்சின் வந்தது

சென்னை: கொரோனா வைரஸ் 2ம் அலை தமிழக அரசின் போர்க்கால நடவடிக்கையால் கட்டுக்குள்ளடங்கி படிப்படியாக குறைந்து வருகிறது. முழுமையான ஊரடங்கு, தடுப்பூசிகள் போடுவதை தீவிரப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் தடுப்பூசிகள் போடப்படும் ஒவ்வொரு இடத்திலும் நீண்ட வரிசையுள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு தேவையான அளவு தடுப்பூசிகளை வழங்காமல் ஒன்றிய அரசு தாமதம் செய்கிறது. தமிழக அரசு, ஒன்றிய அரசை பலமுறை வலியுறுத்தி கேட்டும், தடுப்பூசிகள் மிகவும் தாமதமாக வழங்குகிறது. இதனால் தமிழ்நாட்டில் அரசு தொடங்கிய பல தடுப்பூசி மையங்களில், தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இம்மாதம் முதல் தேதி புனேவிலிருந்து 4,20,570 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழக அரசின் தடுப்பூசி மையத்திற்கும், 1,45,900 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மத்திய மருந்து சேமிப்பு கிடங்கிற்கும் வந்தன. அதன்பின்பு கடந்த 4ம் தேதி ஐதராபாத்திலிருந்து 50 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் மட்டுமே வந்தன. அதன்பின்பு இதுவரை ஒன்றிய அரசு தமிழகத்திற்கு, தடுப்பூசிகளை அனுப்பவில்லை. தனியார் மருத்துவமனைகளுக்கு ஒன்றிய அரசு தொடர்ந்து தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. ஐதராபாத்திலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று காலை 56  கிலோ எடையில் 3 மருந்து பார்சல்கள் வந்தன. அதில் சுமார் 15 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்தன. அந்த தடுப்பூசி மருந்துகள் சென்னை, திருப்பதி, நெல்லூர் ஆகிய இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு வந்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். ஒன்றிய அரசு, தமிழக அரசுக்கு தடுப்பூசிகளை அதிக அளவில் அனுப்பாமல், தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வருகிறது….

The post தனியார் மருத்துவமனைக்கு 15 ஆயிரம் டோஸ் கோவாக்சின் வந்தது appeared first on Dinakaran.

Tags : Chennai ,2nd wave of ,Tamil Nadu government ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...