×

தஞ்சை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி: 800 காளைகள், 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

தஞ்சை: தஞ்சை அருகே  திருமலை சமுத்திரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். தஞ்சாவூர் அருகே உள்ள திருமலை சமுத்திரத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் வருவாய்த்துறை ஆட்சியர் ரஞ்சித் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டு இந்த போட்டியில் கலந்து கொண்டனர் மேலும் போட்டியில் பங்கேற்ற காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

தஞ்சாவூர் புதுக்கோட்டை திருச்சி மணப்பாறை அரியலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 800 காளைகளும் பல்வேறு பகுதியைச் சேர்ந்த மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டு காளைகளை அடக்கிய இதில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள் குவளை பேன் உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. மேலும் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Jallikattu ,Tanjore , Jallikattu competition held near Tanjore: 800 bulls, more than 300 cowherds participated
× RELATED ஜல்லிக்கட்டு வீரர் அடித்துக்கொலை