×

திமுக ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு!: விவசாயிகள் பெறும் பலனே அரசுக்கு கிடைக்கும் பாராட்டு பத்திரம்..முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!!

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். ஒரு லட்சமாவது மின் இணைப்பை வழங்கி விவசாயிகளுடன் சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், திருப்பூரில் அதிகபட்சமாக 7,517 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் 6,906 பேருக்கும், தருமபுரியில் 6,816 பேருக்கும், திருவண்ணாமலையில் 6,527 பேருக்கும், திண்டுக்கல்லில் 5,916 பேருக்கும், கோவையில் 5,604 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 5,364 பேருக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது என தெரிவித்தார்.

இலவச மின் இணைப்பு பெற்ற விவசாயிகள், முதலமைச்சருக்கு உருக்கமான நன்றி தெரிவித்துக்கொண்டனர். தொடர்ந்து பேசிய முதல்வர், அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் திட்டத்தை செயல்படுத்தியவர் கலைஞர். மின்சாரத்தை இலவசமாக கொடுத்தது மட்டுமில்லாமல் விவசாயிகளுக்கு தேவையான மின் இணைப்பும் கலைஞர் ஆட்சியில் தான் கொடுக்கப்பட்டது. புதிதாக வழங்கப்பட்டுள்ள மின் இணைப்புகளால் தமிழ்நாட்டில் விவசாய நிலப்பரப்பு 2.13 லட்சம் ஏக்கர் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. மின் இணைப்பு மூலம் விவசாயிகள் பெறும் பலனே அரசுக்கு கிடைக்கும் பாராட்டு பத்திரம்.

ஓராண்டுக்குள்ளாகவே ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு தந்து சாதனை படைத்துள்ளோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். முதல்வர் ஒரு லட்சமாவது விவசாயி உளுந்தூர்பேட்டை கன்னப்பிள்ளைக்கு மின் இணைப்பு ஆணை வழங்கினார். ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டம் 2021 செப்டம்பர் 23ல் துவக்கி வைக்கப்பட்டது. செப்டம்பரில் தொடங்கப்பட்ட திட்டத்தின்படி இன்று நிறைவு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Dimuka ,CM Md. KKA ,Stalin , DMK, 10 months, one lakh farmers, electricity connection, MK Stalin
× RELATED தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக...