எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் முதல்வர்: விஜயகாந்த் அறிக்கை

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை:

சென்னையில் நடைபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சியினர் வைக்கும் கோரிக்கைகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என எடுத்துரைத்து, அவர்களுக்கு அறிவுரை வழங்கியதை தேமுதிக வரவேற்கிறது. அதேபோல், கச்சதீவை மீட்க நடவடிக்கை எடுப்பதே தமிழக அரசின் முதன்மையான குறிக்கோள் என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்,பேரவையில் அறிவித்ததை தேமுதிக மனமுவந்து வரவேற்கிறது. விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதையும் தேமுதிக வரவேற்கிறது.

Related Stories: