×

ஜெருசலேம் மசூதியில் மோதல் பாலஸ்தீனியர்கள் 160 பேர் காயம்

ஜெருசலேம்: ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதியில் போலீசார் -பாலஸ்தீனியர்கள் இடையே மோதல் வெடித்தது. இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதியில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்காக காலை ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் திரண்டு இருந்தனர். அப்போது, திடீரென இஸ்ரேல் பாதுகாப்பு படைவீரர்கள் மசூதியில் நுழைந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அங்கு மோதல் ஏற்பட்டது. மோதலுக்கான காரணம் தெரியவில்லை.

மோதல் தொடர்பாக பரவி வரும் வீடியோவில் பாலஸ்தீனியர்கள், வீரர்கள்  மீது கற்களை வீசுவது பதிவாகி உள்ளது. மேலும் வீரர்களும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றனர். தடியடி, ரப்பர் குண்டுகளால் காயமடைந்த மற்றும் கண்ணீர் புகை குண்டு வீச்சில் பாதிக்கப்பட்ட 160 பாலஸ்தீனியர்கள்  மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக செஞ்சிலுவை சங்க அவசர சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.


Tags : Palestinians ,Jerusalem , Jerusalem, the mosque, the Palestinians
× RELATED ரஃபா நகரம் மீது இஸ்ரேல் குண்டு மழை: 9 குழந்தைகள் உள்பட 22 பேர் பலி