×

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: ஷாங்காயில் 3,200 பேர் பாதிப்பு

பீஜிங்: சீனாவில் ஒரே நாளில் 3472 பேர் புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20,700 பேருக்கு அறிகுறியற்ற நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு உச்சம் அடைந்து வருகின்றது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 3472 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் சீனாவின் பொருளாதார நகரமான ஷங்காயில் மட்டும் 3200 கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளன.

மேலும் 19,872 அறிகுறியற்ற கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி சுகாதார ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இங்கு தொடர்ந்து ஊரடங்கு நடவடிக்கை அமலில் இருந்து வருகின்றது. ஷாங்காயில் ஏற்கனவே பல சுற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. எனினும் தொற்று பாதிப்பு தொடர்ந்து உச்சம் அடைந்து வருகின்றது. விளையாட்டு மைதானங்கள், நீச்சல்குளங்கள் உள்ளிட்ட இடங்கள் தொற்று பாதித்தவர்கள் மற்றும் அறிகுறியற்ற வகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்பட்டுள்ளது.

ஷங்காய் மிகவும் கடினமான காலகட்டத்தை கடந்து வருவதால் அங்குள்ள பொதுமக்கள் பயம், பதற்றம் மற்றும் சோர்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஊரடங்கு நடவடிக்கை காரணமாக அங்கு உணவுபொருட்கள் பற்றாக்குறை, பக்கத்து வீடுகளில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை தாமதமாக மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியிலும் உயர்வு
டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. பாதிப்பு எண்ணிக்கை கடந்த 1ம் தேதி 0.57 சதவீதமாக இருந்த நிலையில் நேற்று முன்தினம் 2.39 சதவீதமாக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் கொரோனா ெதாற்றினால் புதிதாக 325 பேர் பாதிக்கப்பட்டனர். இதே போல்், கடந்த ஒரு வாரத்தில் வீட்டு தனிமையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புக்குள்ளான  574 பேர் வீட்டு தனிமையில் இருந்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் வீட்டு தனிமையில் இருப்போரின் எண்ணிக்கை 48சதவீதம்  அதிகரித்துள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் மூச்சு காற்று மூலம் கொரோனாவை கண்டறியும் கருவியின் அவசரகால பயன்பாட்டிற்கு உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம், 3 நிமிடங்களில் பரிசோதனை முடிவுகள் தெரிந்து விடும். இதன் முடிவு 91.2 சதவீதம் துல்லியமாக இருக்கும் என கூறப்படுகிறது.
    
கட்டுக்குள் வரும் கொரோனா
* புதிதாக 949 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,39,972ஆக உயர்ந்துள்ளது
* மகாராஷ்டிராவில் 5 பேரும், மிசோரமில் ஒருவர் என மொத்தம் 6 கொரோனா இறப்புக்கள் பதிவாகி உள்ளது. மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 5,21,743.
* நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11,191ஆக அதிகரித்துள்ளது.
* இதுவரை மொத்தம் 186.30கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Tags : China ,Shanghai , China, Corona, Shanghai,
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...