×

தொடர்ந்து தோற்கும் இங்கிலாந்து விலகினார் ரூட்தல ‘ஜோ’: டெஸ்ட் கேப்டனாகிறார் ஸ்டோக்ஸ்

லண்டன்: அதிக டெஸ்ட் ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்த சாதனைக்குரிய  ஜோ ரூட், தொடர் தோல்வி காரணமாக இங்கிலாந்து கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி உள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு,   டெஸ்ட் ஆட்டங்களுக்கு கேப்டன்  ஜோ ரூட்(31). ஒருநாள், டி20 ஆட்டங்களுக்கு கேப்டன்இயான் மோர்கன்(35) . டெஸ்ட் அணியின் கேப்டனாக கடந்த 5 ஆண்டுகளாக இருந்த ரூட்  ஆரம்பத்தில் வெற்றிகரமான கேப்டனாக இருந்தார். ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் நிலைமை தலைகீழானது.

ரூட் தலைமையில் இங்கிலாந்து விளையாடிய 64டெஸ்ட்களில்  27ஆட்டங்களில் வெற்றியும், 26ஆட்டங்களில் தோல்வியும் சந்தித்துள்ளன. மேலும் 11ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன. அந்த 26ல் பெரும்பான்மையான ஆட்டங்கள் கடந்த 2 ஆண்டுகளில் நடந்தவை. கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிரான  தொடர்,  ஆஸ்திரலியோவுக்கு எதிரான ஆஷஸ் தொடர்,  சில நாட்களுக்கு முன்பு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான  தொடர் என தொடர்ந்து 5  டெஸ்ட் தொடர்களை இங்கிலாந்து இழந்தது.

இப்படி தொடர்ந்த தோல்வி காரணமாக  இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜோ ரூட்   நேற்று விலகியுள்ளார். அவருக்கு பதில் பென் ஸ்டோக்ஸ்  கேப்டனாக அறிவிக்கப்படலாம்.

அதிக போட்டிகளில் கேப்டன்
இங்கிலாந்து அணிக்காக அதிக டெஸ்ட் ஆட்டங்களில்(64) கேப்டனாக இருந்தவர், அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்றுத்தந்த கேப்டன்  என்ற பெருமையை ஜோ ரூட் பெற்றுள்ளார்.  அது மட்டுமல்ல கேப்டனாக அதிக ரன்(5295) குவித்த இங்கிலாந்து வீரரும்  ரூட்தான்.

சவாலான முடிவு
இது குறித்து ரூட், ‘வெஸ்ட் இண்டீசில் இருந்து திரும்பியதும் பதவி விலக முடிவு செய்தேன். இந்த முடிவு என் வாழ்க்கையில் எடுக்கும் சவாலான முடிவு. இது குறித்து நெருக்கமானவர்களுடனும், குடும்பத்தினருடனும் ஆலோசித்தேன். எனது நாட்டுக்கு கேப்டனாக இருந்ததற்காக பெருமைப்படுகிறேன். அதனை நான் மிகவும் விரும்பினேன்’ என்று கூறியுள்ளார்.

Tags : Routledge ,Joe ,England ,Stokes , England, Ruddala ‘Joe’, Test captain, Stokes`
× RELATED இஸ்ரேலை தாக்க வேண்டாம்: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை