×

திமுக 15வது பொதுத்தேர்தலை முன்னிட்டு பேரூர், நகர வார்டுகளுக்கான தேர்தல்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு:
திமுக 15வது பொதுத்தேர்தல், 2020 பிப்ரவரி 21ம் தேதி முதல் ஊர்க்கிளை கழக தேர்தல்கள் நடந்து முடிந்ததின் தொடர்ச்சியாக, பேரூர், நகரங்களுக்குட்பட்ட வார்டுகளுக்கான தேர்தல் ஏப்ரல் 22ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும்.  அவைத்தலைவருக்கு போட்டியிட கட்டணமாக ரூ.100, செயலாளர்- ரூ.100, துணைச் செயலாளர்கள் (2) ரூ.100 (ஒருவர் மகளிராகவும் மற்றொருவர் ஆண்), பொருளாளர்- ரூ.100, மேலமைப்புப் பிரதிநிதி- ரூ.100, செயற்குழு உறுப்பினர்கள்-ரூ.20 கட்டணமாகும்.

சென்னை வடகிழக்கு மாவட்டம்- பேரூர்: செங்குன்றம். திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் நகரம்: பொன்னேரி, பேரூர்: கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, மீஞ்சூர், ஆரணி.  திருவள்ளூர் மத்திய மாவட்டம் நகரம்: திருநின்றவூர், பூந்தமல்லி, திருவேற்காடு. பேரூர்: திருமழிசை. திருவள்ளூர் மேற்கு மாவட்டம் நகரம்: திருத்தணி, திருவள்ளூர், பேரூர்: பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை. காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் நகரம்: செங்கல்பட்டு, மறைமலைநகர், மாமல்லபுரம், கன்டோன்மென்ட், குன்றத்தூர், மாங்காடு, நந்திவரம்-கூடுவாஞ்சேரி.

 பேரூர்: ஸ்ரீபெரும்புதூர், திருப்போரூர், திருக்கழுக்குன்றம். காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் நகரம்: மதுராந்தகம், பேரூர்: உத்திரமேரூர், வாலாஜாபாத், இடைக்கழிநாடு, கருங்குழி, அச்சிறுப்பாக்கம். இதேபோல மற்ற மாவட்டங்களில் உள்ள பேரூர், நகரங்களில் தேர்தல் நடைபெறும் இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 21 மாநகராட்சிகளில் (சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தெற்கு, சென்னை தென் மேற்கு ஆகிய மாவட்டங்கள் உள்ளிட்ட) வட்டக்கிளை தேர்தல்கள் புதியதாக அறிவிக்கப்பட்ட வார்டுகளின் அடிப்படையில் நடைபெற உள்ளது.

ஆவடி- 48 வார்டு, தாம்பரம்- 70, காஞ்சிபுரம்- 51, வேலூர்- 60, கடலூர்- 45, தஞ்சாவூர் -51, கும்பகோணம்- 48, திருச்சி -65, கரூர் -48, சேலம் -60, ஒசூர்- 45, கோவை- 100, திருப்பூர் -60, ஈரோடு- 60, மதுரை- 100, திண்டுக்கல் -48, சிவகாசி -48, திருநெல்வேலி -55, தூத்துக்குடி-60, நாகர்கோவில்-52 வார்டுகளுக்கும்  தேர்தல் நடைபெற உள்ளது.

வட்ட உறுப்பினர்கள் ஒன்றுகூடி ஒரு அவைத்தலைவர், ஒரு செயலாளர், துணை செயலாளர்கள் மூவர் (கட்டாயமாக ஒருவர் பொது தொகுதியினராகவும், ஒருவர் ஆதிதிராவிடர் வகுப்பினராகவும், ஒருவர் மகளிராகவும் இருத்தல் வேண்டும்), ஒரு பொருளாளர் மற்றும் மேலமைப்பிற்கு (பகுதிக் கழகத்திற்கு) ஐந்து பிரதிநிதிகளையும், 10 செயற்குழு உறுப்பினர்களையும் ஆக 21 பேர் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்த பொறுப்புகளுக்கு போட்டியிடுவோர், அதற்குரிய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, அதற்குரிய கட்டணத்துடன், வருகிற 29, 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில், அந்தந்த பகுதிக்குரிய வட்ட திமுகவில் போட்டியிடுவோர், சென்னை மாவட்டங்களை தவிர, ஏனைய மாவட்டங்களில், மாவட்ட திமுக அறிவிக்கும் இடங்களில், வேட்புமனு விண்ணப்பத்தாள் ஒன்றுக்கு ரூ.25 வீதம் செலுத்தி பெற்றுக்கொண்டு, பூர்த்தி செய்து, வேட்புமனுக்களை விண்ணப்ப கட்டணத்துடன், தலைமை கழக பிரதிதிகளிடம் தாக்கல் செய்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Dimuka ,15th General Election ,Perur ,City Wards Election ,Thurimurugan , DMK, General Election, Election, General Secretary Duraimurugan
× RELATED தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக...