×

நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில்: பூட்டியே கிடக்கும் பயணிகள் ஓய்வு அறை

நாகர்கோவில்: நாகர்கோவில் டவுண் ரயில் நிலையத்தை நவீனப்படுத்தும் பணி தற்போது நடந்து வருகிறது ஒரு தண்டவாளம் இருந்த இந்த டவுண் ரயில் நிலையத்தில் தற்போது 2 தண்டவாளங்கள் போடப்பட்டுள்ளன மேலும் 3வது தண்டவாளம் போடுவதற்கான பணிகள் நடந்து வருகிறது அதுபோல் உயர்வான இரண்டு பிளாட்பாரங்களை இணைக்கும் மேல்புற நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் இருக்கைகள் மழை வெயிலில் இருந்து பயணிகள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் பிளாட்பார மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் ஜங்சன் ரயில் நிலையத்திற்கு வராமல் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் உள்பட பல ரயில்கள் நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம் வழியாக இயக்கப்படுகிறது.  இதனால் நாகர்கோவில் டவுண் ரயில்நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது மேலும் பயணிகளின் வசதிக்காக அரசு பஸ்சும் இயக்கப்பட்டு வருகிறது கடந்த காலத்தில் முன்பதிவு டிக்கெட் எடுக்கமுடியாத நிலையில் நாகர்கோவில் டவுண் ரயில்நிலையம் இருந்தது தற்போது ரயில் நிலையத்தில் ஒரு மாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இதில் முன்பதிவு ரயில் டிக்கெட் கவுண்டர் மற்றும் மேல்தளத்தில் பயணிகள் ஓய்வு அறை அமைக்கப்பட்டுள்ளது பயணிகள் வசதிக்காக கடந்த சில மாதத்திற்கு முன்பு விஜயகுமார் எம்பி இந்த பயணிகள் ஓய்வு அறை, முன்பதிவு டிக்கெட் கவுண்டர்களை திறந்துவைத்தார் அதனை தொடர்ந்து டிக்கெட் கவுண்டர்களில் 2 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால் மேல்தளத்தில் உள்ள பயணிகள் ஓய்வு அறை திறக்கப்படாமல் அப்படியே உள்ளது அந்த ஓய்வு அறையில் இருக்கை வசதி, கழிப்பறை வசதி உள்ளது. ரயில்நிலையம் வரும் பயணிகள் பிளாட்பாரத்திலேயே அமர்ந்து செல்கின்றனர். அவர்கள் சிறுநீர் கழிக்ககூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முதியவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து அங்கு பணியில் இருந்த ரயில்வே ஊழியர்களிடம் கேட்டபோது இந்த கட்டிடம் ரயில்வே கட்டுமான பிரிவில் உள்ளது. அவர்கள் ரயில்வே நிர்வாகத்திற்கு ஒப்படைக்கவில்லை. என தெரிவித்தனர் இது குறித்து மதுரை மண்டல ரயில்வே உறுப்பினர் சிவகுமார் கூறியதாவது நாகர்கோவில் டவுண் ரயில்நிலையம் பயணிகள் வசதிக்காக நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது டவுண் ரயில் நிலையம் வழியாக பல ரயில்கள் இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் அதிக அளவு வந்து செல்கின்றனர் தொலைதூரம் செல்லும் ரயில் வருவதற்கு தாமதம் ஏற்பட்டால், அதற்காக காத்திருக்கும் பயணிகள் அமரும் வகையில் பயணிகள் ஓய்வு அறை ரயில் நிலையத்தில் உள்ளது இந்த ஓய்வு அறை திறக்கப்பட்டும் பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவில்லை. இதனால் பயணிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர் பயணிகளின் நலனில் அக்கறை கொண்டு ஓய்வு அறையை திறந்து வைக்கவேண்டும் மேலும் அதனை பராமரிக்க போதிய பணியாளர்களை ரயில்வே நிர்வாகம் நியமிக்கவேண்டும் என்றார்.

Tags : Nagargo Town Railway Station ,Boutiya , Locked passenger lounge, Nagercoil Town Railway Station
× RELATED நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில்...