×

சோழவந்தான்: பிரளயநாதர் கோயிலில் பிரதோஷ விழா

சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் பிரளயநாதர்(சிவன்) கோயிலில் நேற்று பிரதோஷ விழா நடந்தது விழாவையொட்டி பிரளயநாதர் சுவாமி பிரளயநாயகி அம்மன் நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன பின்னர் ரிஷப வாகனத்தில் சுவாமியும் அம்பாளும் கோயிலை வலம் வந்தனர் அர்ச்சகர்கள் இரவி பரசுராம் ஐயப்பன் ஆகியோர் சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்  விழா ஏற்பாடுகளை தக்கார் இளமதி எம்விஎம் குழும தலைவர் மணி முத்தையா தொழிலதிபர் வள்ளி மயில் பள்ளி தாளாளர் டாக்டர் மருதுபாண்டியன் மற்றும் பிரதோஷ குழுவினர் செய்திருந்தனர்.
                            
இதேபோல் திருவேடகம் ஏடகநாதர் சட்டநாதர் சித்தர் கோயில் தென்கரை மூலநாத சுவாமி கோயில் விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருதோதைய ஈஸ்வரமுடையார் கோயில் மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பேட்டை அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் பிரதோஷ விழா சிறப்பாக நடந்தது சித்திரை வருட பிறப்பு மீனாட்சி திருக்கல்யாணம் உள்ளிட்ட விசேஷ நாளில் பிரதோஷம் வந்ததால் அனைத்து ஆலயங்களிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Cholhavandan ,Pradosha Festival ,Prayanadar Temple , Pralayanathar temple, Cholavanthan,
× RELATED பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு