×

கொடைக்கானலில் சுற்றுலா இடங்களை சுற்றிப்பார்க்க: அரசு பஸ் சேவை மீண்டும் துவக்கம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களை சுற்றிப்பார்க்க, அரசு பஸ் சேவை நேற்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் அரசு போக்குவரத்து கழக மேலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் உள்ள 12 சுற்றுலா இடங்களை சுற்றிப்பார்க்க கொடைக்கானல் பஸ் நிலையத்திலிருந்து அரசு பஸ் சேவை நேற்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது பெரியவர்களுக்கு ரூ.150, சிறுவர்களுக்கு ரூ.75 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தினமும் காலை 8 மணி முதல் துவங்கும் இச்சேவையை சுற்றுலாப்பயணிகள் பொதுமக்கள் என அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் கோடை சீசன் காலங்களில் மட்டும் இந்த அரசு பஸ் சேவை இயங்கும் என்று அவர் கூறினார். கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த இச்சேவை மீண்டும் துவங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல் மாவட்டத்தின் பிரபல சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு தொடர் விடுமுறை காரணமாக, நேற்று சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. கொடைக்கானலில் கடந்த சில தினங்களாகவே அவ்வப்போது மிதமான மழையும், சில நேரங்களில் கனமழையும் வெளுத்து வாங்கி வருகிறது. அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு குறிப்பாக கொடைக்கானல் நகர் பகுதி மற்றும் கொடைக்கானல் மேல்மலை பகுதிகளான பூம்பாறை மன்னவனூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக கொடைக்கானலில் உள்ள முக்கிய அருவிகளான வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இவ்வாறு, ஆர்ப்பரிக்கும் தண்ணீரை சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியுடன் ரசித்து செல்கின்றனர். அதுபோல் முக்கிய சுற்றுலா இடங்களான மோயர் பாயின்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண் பாறை, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ் வாக் ஆகிய பகுதிகளையும் சுற்றுலாப்பயணிகள் ரசித்து வருகின்றனர் ஏரியில் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். தொடர் விடுமுறையின் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என மலைப்பகுதி வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Kodaikanal , Government bus service resumes in Kodaikanal
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...