×

புனித வெள்ளியையொட்டி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நற்கருணை ஆராதனை

நாகை: ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்கள் கடந்த மார்ச் 2ம் தேதி முதல் உபவாசம் கடைபிடித்து 40 நாள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். குருத்தோலை ஞாயிறு கடந்த 10ம் தேதி நடந்தது நேற்று முன்தினம் சாம்பல் புதன் நடந்தது ஏசு நாதர் பாடுபட்டு சிலுவையில் அறையப்படுவதற்கு முன் தனது சீடர்களுடன் அமர்ந்து இரவு உண்டதை நினைவு கூரும் வகையில் புனித வெள்ளிக்கு முதல் நாளை புனித வியாழனாக கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர். அன்றைய தினத்தில் ஏசு கெத்சமனே தோட்டத்தில் மனம் உருகி வேண்டியதைபோலவும் நற்கருணையை ஏற்படுத்திய நாளை கொண்டாடும் விதமாகவும் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு தியான பாடல்களும், வழிபாடுகளும் இடம்பெறுவது வழக்கம் அதன்படி நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் புனித வியாழன் நேற்று அனுசரிக்கப்பட்டது பேராலய கலையரங்கில் நேற்றிரவு ஏசு பிரான் பங்கேற்ற கடைசி இரவு விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏசு சீடர்களின் பாதங்களை கழுவும் சடங்கு நடந்தது. பேராலய உதவி பங்குத்தந்தை அற்புதராஜ் பங்கேற்று சீடர்களின் பாதங்களை கழுவினார். இதைதொடர்ந்து திவ்ய நற்கருணை ஆசீர் நிகழ்ச்சி நடந்தது. இதைதொடர்ந்து ஏசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளியான இன்று வேளாங்கண்ணி பேராலயத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. காலை பேராலயத்தின் கீழ் கோயிலில் நற்கருணை ஆராதனை நடந்தது. இதைதொடர்ந்து திருவழிபாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் நாகை மற்றும் வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.


நாளை (16ம் தேதி) புனித சனியை முன்னிட்டு இரவு பாஸ்கா திருவிழா சடங்குகள் நடைபெறும் வரும் 17ம் தேதி ஈஸ்டரையொட்டி (உயிர்ப்பு ஞாயிறு) அன்று மாலை கடற்கரை சாலை வழியாக உயிர்த்த ஆண்டவரின் தேர்பவனி நடைபெறும் தேர்பவனி பேராலய கீழ்கோயிலை வந்தடையும் தொடர்ந்து கலையரங்கத்தில் பாஸ்கா நாடகம் நடைபெறும் ஈஸ்டர் பண்டிகையையொட்டி வேளாங்கண்ணியில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதேபோல் தஞ்சை திரு இருதய பேராலயத்தில் புனித வியாழனையொட்டி மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், 12 முதியவர்களின் பாதங்களை கழுவினார். இதைதொடர்ந்து இறைவழிபாடு கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது. இதில் பேராலய பங்குத்தந்தை பிரபாகர், உதவி பங்குத்தந்தை அலெக்சாண்டர் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இதேபோல் புதுக்கோட்டை சாலையில் உள்ள புனித அடைக்கல மாதா அன்னை ஆலயம், மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள லூர்துமாதா ஆலயம், வடக்குவாசல் அருளானந்தர் ஆலயம், மானம்புச்சாவடி சூசையப்பர் ஆலயம், அண்ணாநகர் ஜெபஸ்தியார் ஆலயம், மாதாக்கோட்டை லூர்து மாதா ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி, நற்கருணை பவனி நடந்தது. தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே உள்ள கோட்டை சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலயம், மானம்புச்சாவடியில் உள்ள சிஎஸ்ஐ தூய பேதுரு உள்ளிட்ட சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயங்களில் நற்கருணை ஆராதனை நடந்தது. இன்று புனித வெள்ளி வழிபாடு நடந்தது. திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் நேற்று பேராலய அதிபர் பாக்கியசாமி தலைமையில் புனித வியாழன் நடந்தது. பேராலய அதிபர் பாக்கியசாமி, பேராலயத்தில் அமர வைத்து இருந்த 12 பேரின் கால்களை கழுவினார். பெரம்பலூர் புனித பனிமய மாதா திருத்தலத்தில் சீடர்களின் பாதங்களை தேவாலய பங்குதந்தை ராஜமாணிக்கம் தண்ணீரால் கழுவி முத்தமிட்டார் அதைதொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை நடந்தது இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

Tags : Holy , St Arogya Mata Cathedral, Velankanni on Good Friday
× RELATED அலங்காநல்லூர் அருகே புனித காணிக்கை அன்னை தேவாலய தேர் பவனி விழா