திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் 16 முதல் 25ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா: அறநிலையத்துறை தகவல்

சென்னை: திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் 16.04.2022 முதல் 25.04.2022 வரை பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.108 திவ்ய  தேசத்தின் முக்கிய தலமான  சென்னை திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் பிரமோற்சவ விழா சிறப்பாக நடைபெற திருக்கோயில் சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சித்திரை திருவிழா முதல்  நாள் புன்னைமர வாகனத்தில் பார்த்தசாரதி சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

அதனை தொடர்ந்து சிம்ம வாகனம், யானை வாகனம், ஆனந்த விமானம், குதிரை வாகனம், அனுமந்த வாகனம், சூரிய பிரபை, கண்ணாடி பல்லக்கு, பல்லக்கில் நாச்சியார் திருக்கோலம், விடையாற்றி சாற்றுமுறை, சிறிய தேரில் சுவாமி பவனி வருதல் என தொடர்ந்து சித்திரை மாதம் 03 முதல் சித்திரை மாதம் 12 ஆம் தேதி வரை திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறவுள்ளது. இதனை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று சுவாமி அருள்பெறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related Stories: