மெட்ரோ ரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் தற்கொலை:டெல்லியில் பரபரப்பு

டெல்லி: டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் மாடியில் இருந்து குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் அக்ஷர்தம் மெட்ரோ நிலையத்திற்கு வந்த இளம்பெண் ஒருவர் மெட்ரோ இரயில் நிலையத்தின் மாடிக்கு சென்றுள்ளார்.அப்போது அவர் மேலே இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயற்சித்தார் இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு படை அதிகாரிகள் அவரிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.அவை எதனையும் கேட்காத பெண்மணி தற்கொலை செய்வதில் உறுதியாக இருந்த நிலையில் மெட்ரோ இரயில் நிலையத்தில் பாதுகாப்பில் இருந்த சி.ஐ.எஸ்.எப் அதிகாரிகள் சுதாரித்து கீழே பொதுமக்கள் உதவியுடன் போர்வையை விரித்து வைத்து காத்திருக்க சொல்லியுள்ளனர். இதனையடுத்து, பெண்மணியிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து அவர் தற்கொலை முடிவில் உறுதியாக கீழே குதித்துள்ளார் அவருக்கு எப்படியானாலும் உடலில் காயம் ஏற்பட்டிருக்கும் என்பதால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரின் தற்கொலை முயற்சிக்கான காரணம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

Related Stories: