×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வசந்த உற்சவம் தங்க தேரோட்டம் இன்று தொடங்கியது

திருப்பதி: வசந்த உற்சவத்தை முன்னிட்டு  தங்கத் தேரோட்டம் 30 ஆதி தங்க தேரில் உலா வந்த மலையப்ப சாமி தேரை வடம் பிடித்து இழுத்த பெண்கள். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கோடை கால துவக்கத்தில் வசந்த உற்சவம் மூன்று நாட்கள் நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக வசந்த உற்சவம் உள்ளிட்ட வைபவங்கள் நடைபெறாமல் இருந்து வந்தன. இந்தநிலையில் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெறும் வசந்த உற்சவம் இந்த ஆண்டு ஏழுமலையான் கோவிலில் இன்று துவங்கி நடைபெறுகிறது. வசந்த உற்சவத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோவில் பின்புறம் இருக்கும் வசந்த உற்சவம் மண்டபத்தை தேவஸ்தான தோட்டத்துறையினர் சேஷாசலம் வனப்பகுதியை போல் அலங்கரித்து உள்ளனர். உற்சவத்தின் முதல் நாளான மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கோவில் மாட வீதிகள் வழியாக வசந்த மண்டபத்தில் உற்சவர் மலையப்ப சுவாமியின் தர்பார் நடத்தப்பட்டது.

தொடர்ந்து மதியம் உற்சவ மூர்த்திகளுக்கு விசேஷ அபிஷேகம் நடைபெற்றது. அப்போது பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு சுகந்த திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு சமர்ப்பணங்களுக்கு பின் உற்சவ மூர்த்திகள் மாட வீதிகள் வழியாக கோவிலை அடைந்தனர்.

வசந்த உற்சவத்தின் இரண்டாவது நாளான நாளை காலை திருப்பதி மலையில் கோவில் மாட வீதிகளில் ஏழுமலையானின் தங்க ரத உற்சவம் நடைபெறும். மூன்றாவது நாள் ஆன நாளை மறு நாள் இரவு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி, சீதா தேவி சமேத ராமர் லட்சுமணர் ஆஞ்சநேயர், ருக்மணி தேவி சமேத கிருஷ்ணர் ஆகிய உற்சவ மூர்த்திகளின் திருவீதி உலா ஒரே நேரத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Tirupathi Sevemalayan Temple , gold rush started today at the, Tirupati Ezhumalayan Temple
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோவில் சிறப்பு...