×

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ்-கேகேஆர் மோதல்

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 25வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. முதல் 2 போட்டியில் (ராஜஸ்தான், லக்னோ) தோல்வி அடைந்த ஐதராபாத் கடைசி 2 போட்டியில் (சென்னை, குஜராத்) வெற்றிபெற்றது. இன்று வெற்றியை தொடரும் முனைப்பில் களம் இறங்குகிறது. அபிஷேக் சர்மா பேட்டிங்கில் வலு சேர்க்கிறார். கேப்டன் வில்லியம்சனும் பார்முக்கு திரும்பி உள்ளார். வாஷிங்டன் சுந்தர் காயம் அடைந்துள்ளதால் ஸ்ரேயாஸ் கோபால் களம் இறங்குவார். மற்றபடி பெரிய மாற்றம் இருக்காது.

மறுபுறம் கொல்கத்தா 3 வெற்றி(சென்னை, பஞ்சாப், மும்பை), 2 தோல்வி (பெங்களூரு, டெல்லி) கண்டுள்ளது. கடைசி போட்டியில் டெல்லியிடம் வீழ்ந்தது. இன்று வெற்றிபாதைக்கு திரும்ப முயலும். பேட்டிங்கில் ரகானேவுக்கு பதிலாக ஆரோன் பிஞ்ச், தொடர்ந்து சொதப்பும் சாம்பில்லிங்கிற்கு பதில், ஷெல்டன் ஜாக்சன் சேர்க்கப்படலாம். பந்துவீச்சில் உமேஷ்யாதவ், கம்மின்ஸ் வலு சேர்க்கின்றனர். இரு அணிகளும் இதுவரை 21 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் 14ல் கொல்கத்தா, 7ல் ஐதராபாத் வென்றுள்ளது. கடைசியாக மோதிய 4 போட்டியிலும் கொல்கத்தாவே வென்றுள்ளது.

Tags : Sunrisers ,KKR ,IPL , Sunrisers-KKR clash in today's match in IPL series
× RELATED சன்ரைசர்ஸ் அணிக்கு 209 ரன் இலக்கு: ரஸ்ஸல் அதிரடி ஆட்டம்