காரியாபட்டி, நரிக்குடியில் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்

காரியாபட்டி : காரியாபட்டி, நரிக்குடி பகுதிகளுக்குட்பட்ட முடுக்கன்குளம், நரிக்குடி, கட்டனூர், நாலூர், பட்டமங்களம் உள்ளிட்ட கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றியுள்ள கிராம விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நெல் மூட்டைகளை மாவட்ட வாணிப கழகத்திற்கு ஏற்றி செல்ல லாரிகள் வரவில்லை.

இதனால் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களிலே தேங்கி உள்ளது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன. மேலும் எலிகள் மற்றும் கால்நடைகளாலும் நெல் மூட்டைகள் சேதமடைந்து சிதறி கிடக்கின்றன.

 இதனால் அரசுக்கு நஷ்டம் உண்டாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் அரசு நிதி வீணாவதை தடுக்க நெல் மூட்டைகளை வாணிப கழகத்திற்கு ஏற்றி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: