×

வருசநாடு-வாலிப்பாறை இடையே தார்ச்சாலை அமைக்கப்படுமா?

வருசநாடு :வருசநாடு முதல் வாலிப்பாறை வரையிலான 10 கிமீ தூர தார்ச்சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்தது. பொதுமக்களின் கோரிக்கையையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வருசநாடு-வாலிப்பாறை இடையே புதிய தார்ச்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்பேரில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடந்தது. ஆனால் இந்த சாலையில் குறிப்பிட்ட பகுதிகள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறி தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு வருசநாடு வனத்துறையினர் தடை விதித்தனர்.

இதனால் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை தவிர்த்து மற்ற பகுதிகளில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து முடிந்தது. மீதமுள்ள 5 கிமீ தூரத்துக்கு தார்ச்சாலை அமைக்க வனத்துறையினர் இதுவரை அனுமதி வழங்கவில்லை. இதனால் அந்த பகுதிகளில் மட்டும் தார்ச்சாலை மிகவும் சேதமடைந்து, போக்குவரத்திற்கு பயனற்றதாக உள்ளது.

இதனால் இப்பகுதியில் அதிகளவில் விபத்துகள் நடந்து வருகின்றன. இதில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். மேலும் இந்த வழியாக விவசாய விளைபொருட்களை தேனி, சின்னமனூர் உள்ளிட்ட சந்தைகளுக்கு உரிய நேரத்தில் விவசாயிகளால் கொண்டு செல்ல முடியவில்லை.
எனவே வனத்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருசநாடு-வாலிப்பாறை இடையே முழுமையாக தார்ச்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Varusanadu ,Valipparai , Varusanaadu, valipaarai,Tar road
× RELATED மூலவைகை கரையோரங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்