×

திருவள்ளூர், காஞ்சி, செங்கை மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று புனித வெள்ளி கடைபிடிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புனித வெள்ளியை முன்னிட்டு, அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த தினத்தை நினைவுகூரும் வகையில், இன்று புனித வெள்ளி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு செங்கல்பட்டு அருகே புலிப்பாக்கம் கிராமத்தில் ஒரு கிறிஸ்தவ இளைஞர் சிலுவையை தோளில் சுமந்தவாறு நடந்து சென்று மலையில் இறக்கி வைத்து தத்ரூபமாக நடித்து காட்டும் நிகழ்ச்சி நடந்தது.

அச்சிறுபாக்கம் மழைமலைமாதா ஆலயத்தில் மலையில் சிலுவையை சுமந்து சென்று சிறப்பு பிரார்த்தனை மற்றும் ஜெப கூட்டங்கள் நடைபெற்றது. இதேபோல் கோவளம், மறைமலைநகர், செங்கல்பட்டு, தச்சூர், செய்யூர், கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், திருமணி, வல்லம், சோகண்டி, திம்மாவரம், மல்ரோசாபுரம், கூடுவாஞ்சேரி, தாம்பரம், கேளம்பாக்கம், திருப்போரூர், படாளம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று சிறப்பு பிரார்த்தனை மற்றும் கூட்டு திருப்பலி நடந்தது. பல இடங்களில் சிலுவைகளுடன் ஊர்வலமாக வந்து வழிபட்டனர். காஞ்சிபுரம் தாமல்வார் தெருவில் உள்ள புனித மரியன்னை தேவாலயம், காஞ்சிபுரம் ரயில்வே ரோட்டில் உள்ள கிறிஸ்துநாதர் ஆலயம், உத்திரமேரூர் மல்லிகாபுரம் புனித மரியன்னை ஆலயம், ஸ்ரீபெரும்புதூர் புனித மரியன்னை ஆலயம், ஏசுநாதர் ஆலயம், வாலாஜாபாத் சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலயம் உள்ளிட்ட காஞ்சிபுரம் 26க்கும் மேற்பட்ட தேவாலங்களில் சிறப்பு திருப்பலி, கூட்டு திருப்பலி நடந்தது.

இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் பிரார்த்தனை நடத்தினர்.இதே போன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர், காக்களூர், ஈக்காடு, மணவாளநகர், திருப்பாச்சூர், கடம்பத்தூர், பேரம்பாக்கம், மப்பேடு, கீழச்சேரி, செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, அரண்வாயல், திருமழிசை, வெள்ளவேடு ஆகிய பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

Tags : Holy ,Thiruvallur, Kanchi, Senghi district , Tiruvallur, Kanchi, Chengai, Good Friday, observance
× RELATED சகோதரத்துவத்தை போற்றும் ஈகை திருநாள்