×

பூஜ்ஜில் அமைந்துள்ள கே.கே.படேல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!!

டெல்லி : பூஜ்ஜில் அமைந்துள்ள கே.கே.படேல் உயர்சிறப்பு (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) மருத்துவமனையை இன்று காணொலி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டிற்கு அற்பணித்துள்ளார். பூஜ்ஜில் உள்ள ஸ்ரீ கச்சி லேவா படேல் சமாஜால் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. கச்சில் அமைந்துள்ள முதல் தொண்டு நிறுவன சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இதுவேயாகும்.கச்ச் பகுதியில் மருத்துவ கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்த மருத்துவனை உதவும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
 
200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையான இதில், இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி (கேத்லாப்), கார்டியோடோராசிக் சர்ஜரி, ரேடியேஷன் ஆன்காலஜி, மெடிக்கல் ஆன்காலஜி, சர்ஜிகல் ஆன்காலஜி, நெப்ராலஜி, யூராலஜி, நியூக்ளியர் மெடிசின், நியூரோ சர்ஜரி, மூட்டு மாற்று மற்றும் ஆய்வகம், கதிரியக்கவியல் போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படும். சூப்பர் ஸ்பெஷாலிட்டி சேவைகளை இப்பகுதி மக்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில் குறைந்த கட்டணத்தில் இங்கு வழங்கப்படும்.



Tags : Modi ,KK Patel Super Specialty Hospital ,Bhuj , Bhuj, KK Patel, Super Specialty, Hospital
× RELATED விவேகானந்தர் மண்டபத்தை பிரதமர் மோடி...