திருவாரூர் அருகே மின்கம்பியில் பேனர் உரசி மின்சாரம் பாய்ந்ததில் வி.சி. கட்சி நிர்வாகி பலி

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் துறைத்தோப்பு கிராமத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவுக்காக நேற்று காலை பேனர் வைக்கும் பணியில் நிர்வாகிகள் சிலர் ஈடுபட்டனர். அப்போது மேலே சென்ற மின்கம்பியில் பேனர் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து கட்சியின் இளம் சிறுத்தை பாசறை ஒன்றிய துணை செயலாளரான தில்லைவிளாகம் இந்திரா நகரை சேர்ந்த சோட்டா (எ) சின்னத்துரை(32) சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் மின்சாரம் தாக்கி கார்த்திகேயன்(25), சபரிநாதன்(26), புண்ணியமூர்த்தி(20), மனோஜ்(19) ஆகியோர் படுகாயமடைந்து, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: