அஜித்துக்கு ஜோடியாகும் ரகுல் பிரீத் சிங்

சென்னை: அஜித்துக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்க உள்ளார். வலிமை படத்துக்கு பிறகு வினோத் இயக்கும் அடுத்த படத்திலும் அஜித் நடிக்கிறார். இந்த படத்தையும் வலிமையை தயாரித்த போனி கபூர் தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாகிறது. இதில் நெகட்டிவ் கலந்த ஹீரோ வேடத்தில் அஜித் நடிக்கிறார். அஜித்துக்கு ஜோடியாக அதிதி ராவ் ஹைதரி இதில் நடிப்பார் என கூறப்பட்டு வந்தது. ஆனால் படக்குழுவினர், குறிப்பிட்ட வேடத்துக்கு அவர் பொருந்தமாட்டார் என கூறியதால், இப்போது அந்த வேடத்தில் ரகுல் பிரீத் சிங் நடிக்க இருக்கிறார். தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அயலான் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரகுல் பிரீத் சிங். இந்தியில் 4 படங்களில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில்தான் அஜித் படத்திலும் நடிக்க அவர் தேர்வாகியுள்ளார்.

Related Stories: