×

ரசிகர்களை சந்தித்தார் ரஜினி

சென்னை: ரசிகர்களை சந்தித்து தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டுக்கு ஆண்டுதோறும் அவரது ரசிகர்கள் வருவது வழக்கம். அப்போது, ரசிகர்களை சந்தித்து அவர்களிடமிருந்து ரஜினி வாழ்த்துகளை பெறுவார். அத்துடன் ரசிகர்களுக்கு வாழ்த்துகளும் தெரிவிப்பார். அதேபோல், நேற்று தமிழ் புத்தாண்டையொட்டி ரசிகர்கள் பலரும் அவரது வீட்டுக்கு வெளியே காத்திருந்தனர். அப்போது வீட்டிலிருந்து வெளியே வந்த ரஜினி, ரசிகர்களை சந்தித்தார். அவர்களிடமிருந்து வாழ்த்துகளை பெற்றார். அவர்கள் அளித்த பூச்செண்டுகளையும் பெற்றுக்கொண்டார்.

Tags : Rajini , Rajini met the fans
× RELATED அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம்...