குத்துச்சண்டை பயிற்சி முகாம்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் சான்றிதழ் வழங்கினார்

திருப்போரூர்: தமிழ்நாடு குத்துச்சண்டை கழகம், மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், வாகோ இந்தியா குத்துச்சண்டை கழகம் ஆகியவை இணைந்து சென்னை அருகே படூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஒரு வார குத்துச்சண்டை பயிற்சி முகாமை நடத்தியது. இதன் ஒரு பகுதியாக நேற்று நடந்த தொடக்க விழாவுக்கு வாகோ இந்தியா குத்துச்சண்டை கழக தலைவர் சந்தோஷ் அகர்வால் தலைமை தாங்கினார். முன்னாள் டிஜிபி பிரதீப் பிலிப், தனியார் கல்லூரி நிர்வாகிகள் அசோக் வர்கீஸ், சூசன் மார்த்தாண்டன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இதில், தமிழக சிறுபான்மை நலன் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்,  பயிற்சி முகாமில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் உலகளவில் குத்துச்சண்டை போட்டிகளின் நடுவர்களான இத்தாலி நாட்டை சேர்ந்த நார்டியோ மேனுவல், கியான் பவுலோ கலாஜோ, நார்வே நாட்டை சேர்ந்த பெண் குத்துச்சண்டை பயிற்சியாளர் யுவர்னோ முர்ரே ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். இதில், தமிழ்நாடு குத்துச்சண்டை கழக பொதுச் செயலாளர் சுரேஷ்பாபு, துணை தலைவர்கள் கிஷோர், சதீஷ், ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹரீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: