×

மாதிரி நகரமாக மாறிய நரிக்குறவர் காலனி மாணவிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றிய முதல்வர்: இன்று ஆவடிக்கு வருகை

ஆவடி: ஆவடியில் நரிக்குறவர் மாணவிகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கல்வி தொடர்பாகவும், அவர்கள் படும் இன்னல்கள் குறித்தும் பேசிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு சென்று அந்த மாணவிகளை நேரில் அழைத்து பேசினார். அதன் பின்னர் கடந்த 17-03-2022 அன்று பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசரின் செல்போன் மூலம் காணொலி வாயிலாக நரிக்குறவர் மக்களிடமும், மாணவர்களிடமும் குறைகளை கேட்டறிந்தார். சாலை, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நரிக்குறவர் சிறுமிகள் முன்வைத்தனர்.

இதை அடுத்து நரிக்குறவர் சிறுமி தங்கள் வீட்டில் ஒரு நாள் சாப்பிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டனர். அந்த மக்களின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலையில் 9 மணிக்கு ஆவடிக்கு வருகை தர உள்ளார். ஆவடி மாநகராட்சி மேயர் உள்ளிட்ட நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்ட பின்னர் முதன்முதலாக நரிக்குறவர் மக்களை சந்திக்க வருவதால் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், துப்பரவு தொழிலாளர்கள், வட்டாட்சியர்கள் என பல்வேறு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள், மாணவர்கள் முதல்வர் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.

Tags : Chief Minister ,Narikkuvar Colony ,Avadi , The Chief Minister who fulfilled the demands of the students of Narikkuvar Colony who became a model city: Visit Avadi today
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...